Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 20 ஜூன், 2015

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை - தி இந்து

ஊனமுற்ற குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை - தி இந்து

மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களை மதுரை, விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் நேற்று மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்.
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு நடமாடும் வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த வாகனத்தில் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளுக்கான கருவிகள், செவித்திறன் அளவீட்டுக் கருவி உள்ளிட்டவை இருக்கின்றன.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகை யில், இச்சிறப்பு வாகனம் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று தேவையான சிகிச்சைகளும் பயிற்சிகளும் அளிக்கப்படும். வாரத்தில் சராச ரியாக இரண்டு நாள்கள் இதற்காக ஒதுக்கப்படும். இந்த வாகனத்தில் முடநீக்கியல் வல்லுநர், தோல் நிபுணர், இயன்முறை மருத்துவர் மற்றும் செவித்திறன் அறியும் தொழில்நுட்ப வல்லுநர் இருப்பர்.
மாற்றுத் திறனாளிகள் பட்டியல் விவரப்படி, எந்தெந்த குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி தேவை ப்படும் என்பதைத் தேர்வுசெய்து, அக்குழந்தைகளின் வீட்டுக்கே சென்று மருத்துவச் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படும்.
நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாகச் சென்று 3 சக்கர நாற்காலி வழங் குதல், கால்களை இழந்தோருக்கு சரியான அளவீடு எடுத்து செயற்கை க்கால் தயாரித்து பொருத்துதல் போன்ற பணிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
அதோடு, சிறப்புப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு மாற்றுத் திறனுள்ள குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவைகளோடு இணைந்து மாற்றுத்திறன்கொண்ட மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியில் சேர்த்து பயிலச்செய்வது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சை தேவைபடுவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் உள்ளதாகத் தெரிவித்தனர்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக