Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1

முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை... முடியாததை சிறப்பாக செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை... ¬!

2

சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கபடுகிறான ¬்... பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். ¬..!

3

By Friends......... For Friends........

4

மாற்றுத் திறனாளிகளின் சங்கமம்

5

நட்புக்குள் நட்பாக

திங்கள், 27 ஏப்ரல், 2015

உடற்பயிற்சியின்மையும் மரணமும் - தி இந்து


உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்?
உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்?
அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஹாம்பர்கர் மூலமாக அதிகபட்சச் சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் இதில் விதிவிலக்கு அல்ல.
இயற்கையான எலும்பின் எடையை அதிகரிப்பதற்கு எதைச் சாப்பிட வேண்டும்?
சாளை மீனைச் சாப்பிடலாம். அதில் கால்சியம் அதிகம். பச்சைக் கீரைகள், பால் பொருட்கள் எலும்பு எடையைப் பராமரிப்பதற்கு உதவும். கால்சியத்தை எலும்புகள் ஏற்பதற்குப் போதுமான அளவு வைட்டமின் 'டி'யும் உடலில் அவசியம். உப்பை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். காபி, ஆல்கஹால் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
டியோடரண்ட்டுக்கு மாற்றாக எதைச் சொல்லலாம்?
கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் கலந்த டியோடரண்ட்களுக்கு எலுமிச்சை சாறுதான் சரியான இயற்கை மாற்று. எலுமிச்சையைப் பாதியாக வெட்டி கக்கத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைச் சாற்றில் உள்ள அமிலத்தன்மை பாக்டீரி யாக்களைக் கொன்று கக்கத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை அகற்றும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உதவி

உதவி கேட்காமல் 

கொடுக்க முயற்சி செய்.....

மாற்றுத்திறனாளி

கடவுள் செய்த குற்றம்!

என்னுடைய பட்டம் - மாற்றுத்திறனாளி

சனி, 25 ஏப்ரல், 2015

கலங்கிநின்ற நட்பின் கண்களைக் கண்டபோது..

மேலிருந்து விழும்துளி மழையென்பதால் -உன் மேலிருந்து விழவேண்டாம் நட்பின் கண்களே -அது கண்ணீரெனப் பெயரெடுத்து என்னிதயம் கொல்கிறது வலிநீ கண்டபோதும் உன்வழிகூட நானிருப்பேன்
இனைந்தே நாம்வெல்வோம் இவ்வுலகத் துன்பங்களை
இங்ஙனம்..
உன் நட்பிற்குள் நட்பாக நான்

மெளனமாய்


மெளனமாய் நடைபெறுகிறது... 

தாலியறுக்கும் போராட்டம் 

-டாஸ்மார்க்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

திங்கள், 6 ஏப்ரல், 2015

மாற்றுத் திறனாளிகள் குறித்த ஓர் ஆய்வு

இதன் மூலம் சேகரிக்கப்படும் மாற்றுத்திறன் உடைய நண்பர்களின் விபரங்கள் தகவல்கள் மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக உள்ள கிடைப்பதன் மூலம் ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கும் நமக்கும் உதவும் என்பதன் நோக்கமாக கொண்டு திரட்டப்படுகின்றன. இவ்விபரங்கள் என்னை தவிர என் அனுமதியின்றி தவறான முறையிலோ, வேறு வகையிலோ வெளியிட இயலாது என்பதை உறுதியளிக்கின்றேன்.  

Click Here சர்வே

வியாழன், 2 ஏப்ரல், 2015

வழிகாட்டி

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்...........

மாற்றுத் திறனாளி சகோதர-சகோதரிகளுக்கு உதவும் வகையில்........ இம்முயற்சி.....

தங்களுக்குத் தெரிந்த, தங்களுக்கு அருகாமையில் உள்ள ஊர் மற்றும், மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் சேவையை முதன்மையாக கொண்டு அவர்களுக்காகவே செயல்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் (டிரஸ்ட் அமைப்புகள்), சிறப்பு பள்ளிகள், கல்லூரிகள், செயற்கை உறுப்புகள் மற்றும் உபகரனங்கள் கிடைக்கும் இடம், மறுவாழ்வு மையங்கள், காப்பகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவோர் தொடர்பான விபரங்களை  இதில் பதிவு செய்யவும். வழிகாட்டி