Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 27 ஏப்ரல், 2015

உடற்பயிற்சியின்மையும் மரணமும் - தி இந்து


உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்?
உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்?
அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஹாம்பர்கர் மூலமாக அதிகபட்சச் சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் இதில் விதிவிலக்கு அல்ல.
இயற்கையான எலும்பின் எடையை அதிகரிப்பதற்கு எதைச் சாப்பிட வேண்டும்?
சாளை மீனைச் சாப்பிடலாம். அதில் கால்சியம் அதிகம். பச்சைக் கீரைகள், பால் பொருட்கள் எலும்பு எடையைப் பராமரிப்பதற்கு உதவும். கால்சியத்தை எலும்புகள் ஏற்பதற்குப் போதுமான அளவு வைட்டமின் 'டி'யும் உடலில் அவசியம். உப்பை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். காபி, ஆல்கஹால் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
டியோடரண்ட்டுக்கு மாற்றாக எதைச் சொல்லலாம்?
கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் கலந்த டியோடரண்ட்களுக்கு எலுமிச்சை சாறுதான் சரியான இயற்கை மாற்று. எலுமிச்சையைப் பாதியாக வெட்டி கக்கத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைச் சாற்றில் உள்ள அமிலத்தன்மை பாக்டீரி யாக்களைக் கொன்று கக்கத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை அகற்றும்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக